ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள தெற்கு முனைக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்காக பல உலக கோப்பைகளையும் ஐசிசி தொடரையும் ஒரு கேப்டனாக இருந்து வென்று கொடுத்தவர் டோனி.
அனைத்து விதமான ஐசிசி கோப்பை தொடரையும் வென்ற ஒரே ஒரு கேப்டன் இவர் மட்டுமே.
இந்நிலையில், அவரது தலையில் மேலும் ஒரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
அதாவது, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள தெற்கு முனை பகுதிக்கு டோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதாவது அந்த பகுதிக்கு M.S.Dhoni Pavilion என்று பெயரிடப்பட்டு உள்ளது.