நியூசிலாந்தில் அசத்திய தமிழக வீரருக்கு உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா? தேர்வு குழு தலைவர் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் உலகக்கோப்பை அணிக்கான போட்டியில் ரிஷப் பண்ட், விஜய் சங்கர், ரகானே என அனைவருமே உள்ளதாக கூறியுள்ளார்.

நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இங்கிலாந்தில் வரும் மே மாதல் 30-ல் துவங்கி, ஜூன் 14-ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதற்காக அணிகளை தயார் செய்யும் வகையில் அனைத்து அணிகளும் தங்கள் அணியை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணி சமீபகாலமாக அந்நிய மண்ணில் தொடர் வெற்றிகள் பெற்று அசத்தி வருகிறது. ஆனால் இங்கிலாந்தில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றவில்லை.

நியூசிலாந்து, அவுஸ்திரேலியா தொடர்களில் இந்திய அணியின் பலம் ஓரளவு சோதிக்கப்பட்ட போதும், இன்று வரை உலகக்கோப்பைக்கான சரியான அணியை இதுவரை யாராலும் தெளிவாக கூறமுடியவில்லை.

இதற்கு துவக்க வீரர்கள் ரோகித்-தவான் இருக்கின்றனர். அதன் பின் தலைவர் கோஹ்லி இருக்கிறார். கடைசியில் பினிஷிங்கிற்கு டோனி என உள்ளனர்.

ஆனால் மிடில் ஆர்டரில் தான் இன்று வரை யார் என்ற குழப்பம் நீடிக்கிறது. இதுவரை யாரும் செட்டாகவில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ரிஷப் பாண்ட், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் ஆகியோர் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினர். இதனால் அவர்களுக்கு உலககோப்பையில் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து வந்தது.

இது குறித்து இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான எம்.எஸ்.கே.பிரசாத் கூறுகையில், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அதை விஜய் சங்கர் சரியாக பயன்படுத்தியுள்ளார்.

அதே போல ரிஷப் பண்ட், ரகானே உள்ளிட்டோரும், உலகக்கோப்பைக்கான அணி தேர்வு போட்டியில் உள்ளனர். இதனால் எங்களுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அணியில் ஆரோக்கியமான போட்டி நிலவுவது நல்ல விஷயம் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers