இந்திய அணிக்கு அந்த இருவர் தான் பெரிய பலம்: ஜாம்பவான் முரளிதரன் யாரை புகழ்ந்தார்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணியில் உள்ளது போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் வேறு அணிகளில் இல்லை என முத்தையை முரளிதரன் கூறியுள்ளார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் இந்திய அணி வலுவான அணியாக திகழ்கிறது.

பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகைக்கு பிறகு மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது.

முக்கியமாக ஸ்பின் பவுலிங்கில் குல்தீப் - சாஹல் ஜோடியும் மிரட்டலாக பந்துவீசிவருகிறது.

இந்நிலையில் குல்தீப் மற்றும் சாஹல் குறித்து பேசியுள்ள இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன், ரிஸ்ட் ஸ்பின்னர்களின் அபாரமான பவுலிங்கால் இந்திய அணி வெற்றிகளை குவித்துள்ளது. அதன் விளைவாக ரிஸ்ட் ஸ்பின்னர்கள் மீது இந்திய அணி தேர்வாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்திய அணி 2 ரிஸ்ட் ஸ்பின்னர்களை பெற்றுள்ளது. மற்ற எந்த அணிகளிலும் இது இல்லை. எனவே இதுவே இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்.

உலக கோப்பையில் குல்தீப்பும் சாஹலும் முக்கிய பங்காற்றுவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers