இந்த அணிகள் முன்னணியில் இருக்கின்றன.. ஆனால் மீண்டும் அவுஸ்திரேலியா உலக கோப்பையை வெல்லும்! ரிக்கி பாண்டிங் நம்பிக்கை

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணி மீண்டும் உலக கோப்பையை வெல்லும் என முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

12வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், அவுஸ்திரேலிய அணி மீண்டும் உலகக் கிண்ணத்தை வெல்லும் என அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த முறை நாங்கள் உலக கோப்பையை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலக கோப்பையை நிச்சயம் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன்.

தற்சமயம் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட் வார்னர் திரும்பியதும் எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்து விடும்.

Getty Images

ஸ்மித்தும், வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள். அனுபவசாலிகள், நெருக்கடியான சூழலை திறம்பட கையாளக்கூடியவர்கள். அவர்கள் வந்ததும் உடனடியாக எங்கள் அணியை பார்க்க வலிமை மிக்கதாக தெரிய தொடங்கி விடும்.

உலக கோப்பை போட்டி நடக்கும் இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலை, எங்களது ஆட்ட பாணிக்கு சாதகமானது. அதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக அவுஸ்திரேலியாவும் இருக்கும். திட்டமிட்டப்படி எல்லாமே சரியாக அமைந்து விட்டால் எங்கள் அணி சவால்மிக்க அணியாக விளங்கும்’ என தெரிவித்துள்ளார்.

முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் தலைமையில், 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா தற்போது அவரது பயிற்சியில் விளையாட உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers