சொதப்பிய முன்னணி வீரர்கள்.. பொறுப்பான பேட்ஸ்மேன் என பெயர் வாங்கிய தமிழக வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், மூத்த வீரர்கள் சொதப்பிய நிலையில் தமிழக வீரர் விஜய் ஷங்கர் அபாரமாக ஆடி அசர வைத்தார்.

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், கடைசி வரை போராடிய இந்திய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை இழந்தது.

நியூசிலாந்து நிர்ணயித்த 213 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரரான ஷிகார் தவான் 5 ஓட்டங்களிலேயே வெளியேறி ஏமாற்றம் அளித்தார். பின்னர் களமிறங்கிய தமிழக வீரர் விஜய் ஷங்கர் அதிரடியில் மிரட்டினார்.

பெரிய இலக்க என்பதால் அதிரடியாக ஆட வேண்டும் என்ற சூழலில் பொறுப்புடன் விளையாடிய அவர், 28 பந்துகளில் 2 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் விளாசினார்.

AFP

உலகக் கிண்ண தொடரில் இடம் கிடைக்குமா என்ற பேச்சு இருக்கும் நிலையில், விஜய் ஷங்கரின் இந்த ஆட்டம் அவரை அணியில் நிரந்தர இடம்பிடிக்க உந்துதலாக இருக்கும் என தெரிகிறது.

மேலும், நேற்றைய போட்டியில் இந்திய அணி தரப்பில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் விஜய் ஷங்கர்(43) தான். இதன்மூலம் பொறுப்பான பேட்ஸ்மேன் என அவர் பெயர் பெற்றுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers