அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் அஸ்வின்: ரசிகர்கள் உற்சாகம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சூரத்தில் நடக்க உள்ள சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம் சூரத்தில் சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், திரிப்புரா, டெல்லி உட்பட 37 அணிகள் பங்கேற்கின்றன.

இப்போட்டி பிப்ரவரி 21ம் திகதி முதல் மார்ச் 2ம் திகதி வரை நடக்கிறது. இதில் தமிழக வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபராஜித் ஆகியோருக்கு பதிலாக புதிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய அணியில் அசத்திய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், தமிழக அணியை வழிநடத்த கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அணிக்கு அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டது ரசிகர்களை மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers