மைதானத்தில் திடீரென மயங்கிய அவுஸ்திரேலிய வீரர்: மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் பரபரப்பு

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

உள்ளூரில் நடைபெறும் பிக் பாஸ் கிரிக்கெட் லீக் போட்டியின் போது அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கூல்ட்டர் நைல் திடீரென மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 20 ஓவர் போட்டியில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் இன்று நேருக்குநேர் மோதின.

இந்த போட்டியில் பெர்த் அணிக்காக பந்து வீசிய கூல்ட்டர் நைல், தன்னுடைய 18-வது ஓவரை வீசி கொண்டிருந்த போது திடீரென மயக்கமடைந்து தரையில் அமர்ந்தார்.

இதனையடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கூல்ட்டர் நைல்-க்கு சில மணிநேரங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அணியின் ’ஃபிசியோ’ கிறிஸ் கியூனெல் கூறுகையில், திடீரென ஏற்பட்ட தலைசுற்றலே கூல்ட்டர் நைல் சரிந்ததற்கு காரணம் என தெரிவித்தார்.

முன்னதாக இந்திய அணிக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, 5 ஒருநாள் மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியில் கூல்ட்டர் நைல் இடம்பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers