பவுண்டரி லயனிலிருந்து அசால்ட்டாக ரன் அவுட் செய்த தமிழக வீரர் விஜய் சங்கர்! பரிதாபமாக வெளியேறிய டெய்லர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த டெய்லரை விஜய் சங்கர் ரன் அவுட் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு தற்போது டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்த டெய்லரை தன்னுடைய அசத்தலான த்ரோ மூலம் ரன் அவுட் செய்தார்.

நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, புவனேஷ்வர் குமார் 19-வது ஓவரை வீசினார்.

அந்த ஓவரின்போது சாண்ட்னெரும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரின் கடைசி பந்தை சாண்ட்னெர் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு, அவரும் டெய்லரும் ரன் ஓடினர்.

அந்த பந்தை வேகமாக ஓடிச்சென்று பிடித்த விஜய் சங்கர், பவுண்டரில் லைனிலிருந்து மிக துல்லியமாக ஸ்டம்பில் அடித்தார்.

விஜய் சங்கர் விட்ட த்ரோ, நேரடியாக ஸ்டம்பில் அடித்துவிடும் என்பதை அறிந்த புவனேஷ்வர் குமார், அந்த பந்தை கையில் பிடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது ரன்னை ஓடிய டெய்லர், விஜய் சங்கரின் அபாரமான த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers