இப்படியும் அடிக்க முடியுமா? ஒற்றை கையில் வித்தியாசமாக பந்தை அடித்த டோனி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் டோனி ஒற்றை கையில் அடித்த ஷாட் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று ஆக்லாண்டின் ஈடின் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி ரோகித்(50) மற்றும் தவான்(40) ஆகியோரின் விஸ்வரூப ஆட்டத்தால் 18.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்று சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் டோனி பேட்டிங் செய்த போது, இறந்து வந்து பந்தை அடிக்க முயல்கிறார். ஆனால் பந்தானது சற்று விலகிச் சென்றதால், உடனடியாக ஒற்றை கையில் வித்தியாசமாக பந்தை பேட்டால் தடுத்தார்.

இதனால் இணையவாசிகள் டோனியா ஹெலிகாப்டர் ஷாட்டும் அடிக்க முடியும், ஒற்றை கையால் இது போன்ற ஷாட்டும் அடிக்க முடியும் என்று கூறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers