சிக்ஸர் பறக்க விட்ட பந்தை அபாரமாக தாவி பிடித்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்! ஜீரணிக்க முடியாமல் கத்திய வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், தினேஷ் கார்த்திக் பிடித்த அற்புதமான கேட்ச் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக துவக்க வீரர் டிம் செய்பிர்ட் இந்திய பந்து வீச்சாளர்களை ஒரு கை பார்த்தார்.

43 பந்துகள் சந்தித்த அவர் 84 ஓட்டங்கள் குவித்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் கடின இலக்கை துரத்திய இந்திய அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக், பாண்ட்யா வீசிய 11-வது ஓவரில் டேரில் மிட்சல் அடித்த பந்தை சிக்ஸர் லயனில் இருந்த அபாரமாக கேட்ச் பிடித்தார்.

இந்த கேட்ச மேல் பறந்து சென்ற போது துடுப்பாட்ட வீரர் டேரில் மிட்சல் சிக்ஸர் சென்றுவிட வேண்டும் என்று தொடர்ந்து கத்த, ஆனால் கார்த்திக் பிடித்த கேட்சால் ஜீரணிக்க முடியாமல் பெளலியன் திரும்பினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers