இன்று டோனி மகள் பிறந்தநாள்: சென்னை சூப்பர் கிங்ஸ் அவருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியின் மகள் ZIVA பிறந்தநாளிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து அதை பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்தே, டோனி சென்னை அணிக்காக விளையாடி வருகிறார்.

சூதாட்டம் பிரச்சனை தொடர்பாக சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடை பெற்றிருந்த போது, புனே அணிக்காக விளையாடி வந்தார்.

அதன் பின் சென்னை அணிக்கு மீண்டும் வந்து விளையாடி வருகிறார். என்ன தான் டோனியின் சொந்த ஊர் ராஞ்சி என்றாலும், தமிழ்நாட்டில் டோனிக்கு இருக்கும் மதிப்பு வேறு.

இந்நிலையில் டோனியின் மகள் ZIVA இன்று நான்காவாது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டோனியுடன் ZIVA விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக கொடுத்துள்ளது.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers