பாகிஸ்தான் அணியின் உலகசாதனையை முறியடிக்க இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு! வரலாறு படைக்குமா?

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றினால், பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-0 என்று கைப்பற்றி அசத்தியுள்ளது.

எங்கள் நாட்டிற்கே வந்து இந்திய அணி 4-0 என கைப்பற்றியுள்ளது, சாதரண விஷயமல்ல என்று நியூசிலாந்து அணியின் தலைவர் வில்லியம்சன் இந்திய அணியை புகழ்ந்திருந்தார்.

இதையடுத்து இன்று இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த டி20 தொடரை மட்டும் இந்தியா கைப்பற்றிவிட்டால் மிகப் பெரிய உலக சாதனை காத்திருக்கிறது.

பாகிஸ்தான் அணி கடந்த சில மாதங்களாகவே டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்தணி கடைசியாக விளையாடி 10 டி20 தொடரிலும் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்து வந்தது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது. இதனால் தொடர்ந்து 10 தொடர்கள் வெற்றி என்ற சாதனையை பாகிஸ்தான் தன் வசம் வைத்துள்ளது.

இதே போன்று தான் இந்திய அணியும் இதுவரை 10 டி20 தொடர்களில் தொடர்ந்து வெற்றியை குவித்துள்ளது. இதனால் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரை மட்டும் கைப்பற்றி விட்டால், பாகிஸ்தான் அணியின் சாதனையை முறியடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers