தொடக்க வீரர் இல்லாததால் நியூசிலாந்து அணிக்கு நேர்ந்த நிலை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தொடக்க வீரர் கப்தில் இல்லாததால், தான் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை வெலிங்டனில் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடரை இழந்த நியூசிலாந்து அணி டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால், அந்த அணியின் அதிரடி தொடக்க வீரர் கப்தில் காயம் காரணமாக விளையாடாதது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாகும். இதனால் தொடக்க வீரராக தான் விளையாட கூட வாய்ப்புள்ளதாக கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கப்தில் இடத்தில் யார் விளையாடுவார் என்பது இன்னும் தெரியவில்லை. அவரது இடத்தில் விளையாட நிறைய வீரர்கள் தயாராக உள்ளனர்.

சில திறமையான வீரர்கள் அந்த இடத்தில் விளையாடவுள்ளதால், அதற்கு ஏற்றவாறு அணியின் பேட்டிங் மாற்றப்படும். நான் கூட அந்த இடத்தில் விளையாடலாம்’ என தெரிவித்துள்ளார்.

PHOTOSPORT

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்