இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் பெயர் அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 6ஆம் திகதி தொடங்கி மார்ச் 24ஆம் திகதி வரை தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணித்தலைவராக திமுத் கருணரத்னே நியமிக்கப்பட்டுள்ளார்.

தினேஷ் சண்டிமாலிடம் இருந்து அணித்தலைவர் பதவி பறிக்கப்பட்டதுடன், தென் ஆப்பிரிக்கா தொடரில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் போட்டிகளில் அதிகம் விளையாடி பார்முக்கு அவர் மீண்டும் திரும்ப இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவராக கருணரத்னே நியமிக்கப்பட்டது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்