இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திகா ஹத்ருசின்கா பயிற்சியில் அந்த அணி சாதித்தது என்ன?

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சந்திகா ஹத்ருசின்கா பதவியேற்ற பின்னர் இலங்கை அணி அதிக தோல்விகளையே சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

சந்திகா ஹத்ருசின்கா கடந்த 2018ஆம் ஆண்டு 1ஆம் திகதி அதிகாரபூர்வமாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

அதிலிருந்து அவர் தலைமையில் 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணி 13 போட்டியில் தோல்வியடைந்த நிலையில் 6ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை.

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் 14 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை அணி 7 தோல்வியும், 4 வெற்றியும் கண்டுள்ளது. 3 போட்டிகள் டிரா ஆனது.

சந்திகா பயிற்சியாளரான பின்னர் 9 டி20 போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை அணி 5 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்