அவர் இந்தியாவின் சொத்து! சச்சின் டெண்டுல்கர் வியந்து பாராட்டியது யாரை தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக் கிண்ண போட்டியில் எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இருப்பார் எனவும், அவர் இந்தியாவின் சொத்து எனவும் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. அவர் 4 டெஸ்ட்களில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வளிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 24ஆம் திகதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாட உள்ளார்.

இந்நிலையில், பும்ராவின் பந்துவீச்சு குறித்து முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘2015ஆம் ஆண்டிலேயே அவரது திறமையையும் போராட்ட குணத்தையும் கண்டிருக்கிறேன். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு தன்னை வளர்த்திருக்கிறார்.

அவரது வெற்றி எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. முன்பே தெரிந்தது தான். அவரது வித்தியாசமான, பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத பந்துவீச்சு முறையும், தொடர்ந்து விக்கெட் வீழ்த்தும் திறமையும் அவரை அபாயகரமான பந்துவீச்சாளராக மாற்றியிருக்கிறது.

திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். உலகக் கிண்ண போட்டியில் எதிரணிக்கு பெரிய அச்சுறுத்தலாக அவர் இருப்பார். அவர் இந்தியாவின் சொத்து’ என தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்