இலங்கையின் ஆட்டம் மிகவும் மோசம்! முன்னாள் ஜாம்பவான் முரளிதரன் கடும் விமர்சனம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த தொடருக்கு வார்னே-முரளிதரன் என்று பெயரிடப்பட்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியது.

முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் 366 ஓட்டங்கள் வித்தியாசத்திலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் மோசமான தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘குசால் மெண்டிஸ் போன்ற இளம் வீரர்கள் அதிக திறமை பெற்றுள்ளனர். ஆனால், அவர்களால் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

இது அவர்களின் பேட்டிங் மீது அதிக நெருக்கடியை ஏற்படுத்துகிறது. கடந்த 3-4 ஆண்டுகளாக இந்த கதை தொடர்கிறது. இதில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதுதான் தற்போது நிகழ்ந்துள்ளது. சர்வதேச போட்டியில் களமிறங்கும்போது என்ன செய்ய வேண்டும் என்ற திறன் அவர்களிடம் இல்லை.

தற்போது இலங்கை மிகவும் மோசமாக விளையாடுகிறது. அதேபோல் அவுஸ்திரேலியாவின் ஆட்டமும் முன்னர் போல் சிறப்பாக இல்லை. எனினும், அவுஸ்திரேலியாவை விட இலங்கை அணி மிகவும் மோசமாக விளையாடியது.

இலங்கை வீரர்களின் லெவனில் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இதனால் அவுஸ்திரேலிய மண்ணில் இலங்கை டெஸ்டை வெல்ல வாய்ப்புள்ளது என்று கூறுவது கடினம். இது நடப்பதாக நான் பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers