4 பந்தில் 18 ரன்கள்.. ஐந்தாவது பந்தில் வில்லியம்சன் ஸ்டம்பை தெறிக்க விட்ட இந்திய வீரர் ஷமியின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வில்லியம்சன் ஸ்டம்பை தெறிக்கவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பே ஓவலில் நடைபெற்றது.

இதில் இந்திய அணி நிர்ணயித்த 324 ஓட்டங்களை, நியூசிலாந்து அணி எட்ட முடியாமல் 234 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இப்போட்டியில் 8-வது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நியூசிலாந்து வீரர் வில்லியம்சனுக்கு வீசினார்.

அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் விளாசிய வில்லியம்சன், மூன்றாவது பந்தில் பவுண்டரியும் நான்காவது பந்தில் 2 ஓட்டங்களும் அடித்தார். 4 பந்துகளில் 18 ஓட்டங்களை குவித்தார்.

அந்த ஓவரில் ஆதிக்கம் செலுத்திய வில்லியம்சன், ஐந்தாவது பந்தையும் அடிக்க நினைத்து போல்டாகி வெளியேறினார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers