இந்திய வீரர்களில் டோனி செய்த சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் டோனி, அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்களில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனியின் 337வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும்.

இதன்மூலம், அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளிலும், ராகுல் டிராவிட் 344 போட்டிகளிலும் விளையாடி முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

முன்னாள் இந்திய அணித்தலைவர் அசாருதீனை(334) விக்கெட் கீப்பர் டோனி பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers