காலை கிரீசை விட்டு எடுப்பியா? நியூசிலாந்து வீரரை மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த டோனி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பே ஓவலில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்கள் எடுத்தது. ரோகித் சர்மா அதிகபட்சமாக 87 ஓட்டங்களும், ஷிகார் தவான் 66 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் நியூசிலாந்து அணி சற்று முன் வரை 21 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் டோனி வழக்கம் போல் மின்னல் வேக ஸ்டம்பிங் ஒன்றை செய்துள்ளார்.

ஆட்டத்தின் 17-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கீதர் ஜாதவ் வீச, அதை ரோஸ் டெய்லர் எதிர் கொண்ட போது, பந்தானது அவரை ஏமாற்றி கீப்பர் டோனியிடம் சென்றது.

டோனி பிடித்த வேகத்தில் ஸ்டம்பிங் செய்ததால், டெய்லர் பரிதாபமாக வெளியேறினார். அந்த வீடியோ தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers