மனைவி- மகளை நினைத்து கவலையில் இருக்கும் ரோகித்சர்மா! உண்மையை உடைத்த வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித்சர்மா எப்போதும் தன்னுடைய மனைவி மற்றும் மகளை நினைத்து கவலைப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் இன்று பே ஓவலில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால் தெரிவித்துள்ளார்.

ரோகித்திற்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. இது குறித்து சஹால் கூறுகையில், அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மாவிற்கு பெண்குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து சில நாட்களிலே ரோஹித் இந்திய அணிக்கு விளையாட வந்துவிட்டார். இதனால் அவரது எண்ணம் எல்லாம் அவரது தனது மனைவி மற்றும் மகளை பற்றியே இருக்கிறது. எனவே, அவர் தனிமையில் இருப்பதாக உணர்கிறார் என்று சாஹல் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers