எனக்கு விளையாட வாய்ப்பு கொடுங்க என கெஞ்சிய பாண்ட்யா! இந்திய கிரிக்கெட் போர்டு எடுத்துள்ள முடிவு என்ன?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் இளம் வீரர்களான ஹார்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசிய விவகாரத்தில் விதிக்கப்பட்ட இடைக்கால தடையை விலக்கிக் கொள்வதாக இந்திய கிரிகெட் போர்டு அறிவித்ததால், அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, பாண்ட்யா பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசினார்.

இந்த விவகாரம் பெரிய பூதாகரமாக வெடித்ததால், அவர்கள் இரண்டு பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் பாண்ட்யா மன்னிப்பும் கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து இவர்கள் விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, விசாரணை அதிகாரியை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் மீதான இடைக்கால தடையை பிசிசிஐ திரும்ப பெற்றுள்ளது.

விசாரணை அதிகாரியை உச்சநீதிமன்றம் நியமித்த பின்னர், இருவர் மீதான விசாரணை தொடரும் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை நீக்கப்பட்டதையடுத்து பாண்ட்யா நியூசிலாந்து அணியுடனான நடப்பு கிரிக்கெட் தொடரில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறும், தனக்கு விளையாட வாய்ப்பு கொடுக்குமாறும் பி.சி.சி.ஐ.யிடம் ஹார்திக் பாண்ட்யா கோரிக்கை வைத்திருந்தார்.

பி.சி.சி.ஐ., இவரது கோரிக்கையை பரிசீலித்து ஏற்கும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது அல்லது நான்காவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

அதே போல், இவருடன் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு வீரரான கே.எல் ராகுல் இந்திய ஏ அணியில் இணைந்து விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்