ஸ்டார்க்கை மிரண்டு போக வைத்த இலங்கை வீரர் டிக்வெல்லா! ஸ்கூப் முறையில் சிக்ஸர் அடித்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டிக்வெல்லாவின் ஆட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்று இலங்கை அணியின் துணை தலைவர் திமுத் கருணரத்னே கூறியுள்ள நிலையில், டிக்வெல்லா அடித்த ஸ்கூப் ஸாட் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, அங்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்போனில் நேற்று துவங்கியது.

அதன் படி முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணியில் 7-வது வீரராக களமிறங்கிய டிக்வெல்லா 78 பந்துகள் சந்தித்து 64 ஓட்டங்கள் குவித்தார்.

இவர் இந்த ஓட்டம் அடிததன் மூலமாக மட்டுமே மிகவும் மோசமான நிலையில் இருந்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களை குவித்தது.

டிக்வெல்லா முதலில் வந்த வேகத்தில் வெளியேறியிருந்தால், இலங்கையின் நிலை மிகவும் மோசமாகியிருக்கும்.

இதையடுத்து தொடர்ந்து ஆடி வரும் அவுஸ்திரேலியா அணி இன்று சற்று முன்பு வரை 4 விக்கெட் இழப்பிற்கு 214 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இலங்கை அணியின் துணை தலைவர் திமுத் கருணரத்னே நேற்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி வீரர்கள் டிக்வெல்லாவின் நேரத்தியான ஆட்டத்தைக் கண்டு, அவரைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஏனெனில் அவுஸ்திரேலியா வீரர்கள் 143 கி.மீற்றர் வேகத்திற்கு பந்து வீசியும், அதை டிக்வெல்லா சாதுர்யமாக தன்னுடைய முழங்காலை தாழ்த்து ஸ்கூப் முறையில் அடித்து ஆச்சரியபப்டுத்தினார்.

இது போன்று பல ஷாட்கள் ஆடினார். அவுஸ்திரேலியா வீரர்களின் பந்து விச்சையும் எளிதாக எதிர்கொண்டார். அவரைப் போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால், நாம் சிறப்பான ஓட்டத்தை குவித்திருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் டிக்வெல்லா ஸ்கூப் முறையில் ஸ்டார்கின் பந்து வீச்சில் சிக்ஸர் அடித்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers