இந்திய அணிக்கு நிச்சயமாக திருப்பி கொடுப்போம்! நியூசிலாந்து வீரர் சபதம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததிலிருந்து நியூசிலாந்து அணி விரைவில் மீண்டு வரும் என அந்தணியின் வீரர் பெர்குசான் தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும், சொந்த மண்ணில் விளையாடுவதால், நியூசிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முதல் போட்டியிலே 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இந்திய அணியின் தலைவ கோஹ்லி கூட, நாங்கள் நியூசிலாந்து அணி 300 ஓட்டங்களுகு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்தோம், ஆனால் ஆட்ட இப்படி முடிந்துவிட்டது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பெர்குசான், முதல் ஒருநாள் போட்டியில்

நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் உண்மை. எங்களது தவறால் தான் தோல்வியடைந்தோம்.

கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். அந்த தோல்வியில் இருந்து அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். முதல் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்கி வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்