நியூசிலாந்திலும் மின்னல் வேக ஸ்டமிங் செய்த டோனி! நூலிழையில் வீரரை வெளியேற்றிய வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டோனி மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது.

முதலில் ஆடிய நியூசிலாந்து அணி குல்தீப்யாதவின் சுழலில் தாக்குபிடிக்க முடியாமல் 38 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி சற்று முன் வரை ஒரு விக்கெட் இழப்பிற்கு 112 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் வழக்கம் போல் டோனி தன்னுடைய மின்னல் வேக ஸ்டம்பிங் ஒன்றை செய்துள்ளார்.

குல்தீப் யாதவ் வீசிய 35-வது ஓவரில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன் அடித்து ஆட முற்பட ஆனால் பந்தானது விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது. டோனி பிடித்த வேகத்தில் ஸ்டம்பிங் செய்ய, நூலிழையில் விக்கெட்டை பரிகொடுத்து லாக்கி பெர்குசன் வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers