உலககோப்பையில் அஸ்வின் இடம்பெற வேண்டும்: கவுதம்கம்பீர்

Report Print Abisha in கிரிக்கெட்

உலக கோப்பை தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறவேண்டும் என்று இந்திய முன்னாள்வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டகாரரான கவுதம் கம்பீர் சர்வதேச அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதொடர்ந்து அதிரடியான கருத்துகள் வெளிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர், இந்திய உலக கோப்பை அணியில் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும்குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் கடந்த ஆண்டிலிருந்து நன்றாக பந்துவீசி வருவதாகவும்.எனினும் அஷ்வின் போன்ற ஒருவர் அணியில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அஸ்வின் தற்போதுடெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். யாதவ் மற்றும் சஹால் வருகைக்கு பின்னால்அஸ்வின் அணியில் இடம்பெற இயலாமல் போய்விட்டது.

இது குறித்து அஸ்வின் முன்னதாக தான்உலக கோப்பை அணியில் நிச்சயம் இடம் பிடிப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கவுதமின்இந்த கருத்து அஸ்வின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers