ஒருநாள் போட்டியில் ஷிகர் தவானின் புதிய சாதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ஒருநாள் போட்டிகளில் விரைவாக 5000 ஓட்டங்கள் எடுத்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நேப்பியரில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி துடுப்பாட்டம் செய்து வருகிறது. தொடக்க வீரர் ஷிகர் தவான் 10 ஓட்டங்களை கடந்தபோது, ஒருநாள் போட்டிகளில் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மேலும், விரைவாக இந்த மைல்கல்லை எட்டிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். தவான் 118 இன்னிங்சில் 5000 ஓட்டங்களை கடந்துள்ளார். இவருக்கு முன் கோஹ்லி 114 இன்னிங்சிலேயே இந்த சாதனையை செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் தவான் 15 சதங்களும், 25 அரைசதங்களும் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 137 என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஆம்லா 101 இன்னிங்சில் 5000 ஓட்டங்களை கடந்து முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் ரிச்சர்ட்ஸும்(114), இந்திய அணி கேப்டன் கோஹ்லியும் (114) மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவும்(118) உள்ளனர். ஷிகார் தவான் 4வது இடத்தில் உள்ளார்.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers