புதிய சாதனை படைத்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஒருநாள் போட்டியில் வேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து ஆடியது.

இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 157 ஓட்டங்களில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் ஷமி 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடக்க வீரர் கப்தில் விக்கெட் ஷமியின் 100வது விக்கெட் ஆகும். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு இர்பான் பதான் 59 போட்டிகளில் நூறு விக்கெட்டுகள் கைப்பற்றியதே சாதனையாக இருந்த நிலையில், ஷமி 56 போட்டிகளிலேயே அதனை முறியடித்துள்ளார்.

சர்வதேச அளவில் ஆப்கன் வீரர் ரஷித் கான் 44 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மிட்செல் ஸ்டார்க்(53), சாக்லைன் முஸ்தாக்(53), ஷேன் பாண்ட்(54), பிரெட் லீ(55) ஆகியோர் உள்ளனர்.

அதிவேகமாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர்கள்
  • முகமது ஷமி (56 போட்டிகள்)
  • இர்பான் பதான் (59 போட்டிகள்)
  • ஜாகீர்கான் (65 போட்டிகள்)
  • அஜித் அகர்கர் (67 போட்டிகள்)
  • ஜவஹல் ஸ்ரீநாத் (68 போட்டிகள்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers