அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரின் பரிதாப நிலை! இலங்கை தொடரில் ஏன் சேர்க்கவில்லை என ஆவேசம்

Report Print Kabilan in கிரிக்கெட்

அணியில் இடம் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வாட் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 24ஆம் திகதி தொடங்குகிறது. இதற்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.

ஆனால், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான மேத்யூ வாட் அணியில் சேர்க்கப்படவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின் அவர் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வாட், நேற்று நடந்த பிக்பாஷ் லீக் போட்டி ஒன்றில் 49 பந்துகளில் 84 ஓட்டங்கள் விளாசினார். இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் தெரிவு செய்யப்படாதது குறித்து மேத்யூ வாட், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை விளாசியுள்ளார்.

Daniel Wilkins

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘கிரிக்கெட் அவுஸ்திரேலிய லெவன் அணியில் இரு சதம் அடித்த குர்திக் பாட்டர்ஸன் அணிக்கு தெரிவு செய்துள்ளதை அறிந்தேன். நான் உள்நாட்டுப் போட்டியில் இந்த சீசனில் ஆயிரம் ஓட்டங்களை எட்டி இருக்கிறேன்.

தொடர்ந்து இரு சதம் அடித்த வீரரை தெரிவு செய்தோம் என்று தேர்வு வாரியம் கூறியுள்ளது. அப்படியென்றால் உள்நாட்டுப் போட்டிகளிலும், ஷெப்பீல்ட் போட்டியிலும் ஓட்டங்களைச் சேர்த்த எனக்கு என்ன மதிப்பு இருக்கிறது.

அவுஸ்திரேலிய தேர்வு வாரியத்தில் என்ன நடக்கிறது என்பது உறுதியாக தெரியவில்லை. சிறப்பாக ஸ்கோர் செய்தும் என்னை அணிக்கு தெரிவு செய்யாதது என்னை வேதனைக்கு உள்ளாக்குகிறது.

ஒருபுறம் ஒரு வீரரைப் பற்றி புகழ்ந்துவிட்டு, மறுபுறம் மற்றொரு வீரரை அணியில் தெரிவு செய்தது எந்தவிதத்தில் நியாயம்.

உங்களின் அணி தேர்வு வரையறை எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். நான் என்னை மட்டும் குறிப்பிடவில்லை, எனக்காக மட்டும் பேசவில்லை. இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டு அணியிலும் உள்ள கிரிக்கெட் வீரருக்காக இதைக் கூறுகிறேன்.

சதம் அடித்த வீரர்கள், ஸ்கோர் செய்த வீரர்களை தான் தெரிவு செய்கிறோம் என்றால், எனக்குத்தானே முன்னுரிமை அளிக்க வேண்டும், அதை செய்திருக்க வேண்டும். அப்போது அது உங்கள் வரைமுறை இல்லை என்றால், மற்ற வீரர்களை எவ்வாறு தெரிவு செய்கிறீர்கள் எனக் கூறுங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

மேத்யூ வாட் இதுவரை 22 டெஸ்ட், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers