எனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம்: விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனக்கு கிரிக்கெட்டை விட குடும்பம் தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி தனது எதிர்கால திட்டம் குறித்து பேட்டியளித்துள்ளார். அதில் தனக்கு குடும்பம் தான் முக்கியம் என்றும், கிரிக்கெட் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘எட்டு வருடம் ஆகி விட்டது. ஆனால், குடும்பம் தான் எனக்கு முக்கியம். கிரிக்கெட் என் வாழ்வின் அங்கம், ஆனால் குடும்பம் தான் எப்போதும் முக்கியம். சிலர் வாழ்க்கை முக்கியம் என நினைப்பார்கள்.

அதன் பின், கிரிக்கெட்டை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதற்கு நீங்கள் உண்மையாக இல்லை என்பார்கள். நான் அதை நம்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஓய்வுக்கு பின் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கோஹ்லி, ஓய்வுக்கு பின் பேட்டை தொடவே மாட்டேன் என்றும் கிரிக்கெட் ஆடியது போதும் என்ற முடிவுக்கு பின் தான் ஓய்வு எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers