கடும் நெருக்கடியிலும் டோனிக்கு ஆதரவளித்தவர் கோஹ்லி: புகழ்ந்து தள்ளிய இந்திய முன்னாள் கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, விக்கெட் கீப்பர் டோனிக்கு கடுமையான நெருக்கடியிலும் கோஹ்லி ஆதரவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மகேந்திர சிங் டோனிக்கு வயதாகி விட்டதால் அவர் அணியில் இருக்க வேண்டியது அவசியமா? என முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 51, 55 மற்றும் 87 என ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில், கடும் நெருக்கடியில் இருந்து டோனி மீண்டு வருவதற்கு கோஹ்லி தான் காரணம் என இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பாராட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘டோனிக்கும், கோஹ்லிக்கும் உறவு அனைவரும் அறிந்தது தான். இரண்டு பேருமே இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார்கள்.

இப்போதைக்கு இந்திய அணியில் டோனி தான் சீனியர் வீரர். இதனாலேயே அவர் கடும் நெருக்கடிகளை சந்தித்தார். அந்த தருணங்களில் டோனிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பவராக கோஹ்லி இருந்தார்.

டோனியை அணியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அணியில் இடம்பெற வைத்தார். ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதையே ஒரு சிறந்த அணியை உருவாக்கும். அந்த வகையில் கோஹ்லியை பாராட்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers