பிக்பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பிரண்டன் மெக்கல்லம் அபாரமாக செயல்பட்டு சிக்ஸரை தடுத்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட்-சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணி 98 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
No catch but how did Brendon McCullum stop this from going for a boundary!?#BBL08 | @BKTtires pic.twitter.com/BZagW88nQ7
— cricket.com.au (@cricketcomau) January 20, 2019
சிட்னி சிக்ஸர்ஸ் அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, அந்த அணி வீரர் வின்ஸ் அடித்த பந்து சிக்ஸரை நோக்கி சென்றது. அப்போது பவுண்டரி எல்லையில் இருந்த மெக்கல்லம் கேட்ச் பிடிக்கவில்லை என்றாலும் சிக்சரை தடுத்தார்.
ஆனால், மீண்டும் பந்து எல்லைக் கோட்டில் விழுவதைப் பார்த்த அவர், அந்தரத்திலேயே பந்தை தட்டி விட்டார். இதனால் சிக்ஸர் தடுக்கப்பட்டது.