கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஆம்லா!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் ஆடியது.

தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா 120 பந்துகளில் ஒரு சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களும் (நாட்-அவுட்), வான் டெர் துசென் 93 ஓட்டங்களும் குவித்தனர். இந்த சதத்தின் மூலம் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்சில் வேகமாக 27 சதங்கள் அடித்த விராட் கோஹ்லியின் சாதனையை ஆம்லா முறியடித்துள்ளார்.

கோஹ்லி 169 இன்னிங்சில் 27 சதங்கள் அடித்த நிலையில், ஆம்லா 167 இன்னிங்சிலேயே இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 86 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் பாபர் அசாம் 49 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து வந்த முகம்மது ஹபீஸ் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அவர் 63 பந்துகளில் 2 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் 71 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதனால் பாகிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ஒலிவியர் 2 விக்கெட்டுகளையும், பிலுக்வாயோ, தாஹிர் மற்றும் ஹென்ரிக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers