சேஸிங்கில் என்னை யாரும் முந்த முடியாது! கோஹ்லியின் சாதனையை தூள் தூளாக்கி அசத்திய டோனி

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றி தேடித்தந்த டோனி, சேஸிங்கில் கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டியில் இரண்டு அணிகளுமே 1-1 என்று சமநிலையை வகித்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மெல்பர்னில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா அணி நிர்ணயித்த 230 ஓட்டங்களை, இந்திய அணி 49.2 ஓவரில் 234 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்று 2-1 என்று தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான டோனி அரைசதம் கடந்து 87 ஓட்டங்கள் எடுத்து அசத்தினர்.

இந்நிலையில் இந்த போட்டியில் மட்டுமின்றி, மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவர் தொடர்நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம், இரண்டாவது இன்னிங்கில் அதாவது சேஸிங்கில் அதிக சராசரி வைத்துள்ள வீரர்கள் பட்டியலில் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி டோனி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

டோனி 103.7 சராசரியுடன் முதல் இடத்திலும், கோஹ்லி 97.98 என்ற சராசரியுடன் இரண்டாவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் 82.77 சராசரியுடன் மூன்றாவது இடத்திலும், அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கல் கிளார்க் 73.86 புள்ளிகளுடனும், இலங்கை வீரர் அர்ஜுன் ரணதுங்கா 69.20 புள்ளியுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers