அடுத்தடுத்து 3 அரைசதம்: அவுஸ்திரேலிய மைதானத்தில் கெத்து காட்டும் டோனி

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

மெல்போர்ன் மைதானத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், டோனி அரைசதமடித்து அசத்தியுள்ளார்.

இந்திய அணியானது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, இந்திய அணி 71 ஆண்டுகால வரலாற்று சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான ரோகித்சர்மா 9 ரன்களிலும், தவான் 23 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனையடுத்து சேர்ந்த டோனி - கோஹ்லி ஜோடி நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அணி 113 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி 46 ரங்களில் அவுட்டாகினர்.

பின்னர் இறங்கிய கெடார் ஜாதவ் அதிரடியாக விளையாட, மறுபக்கம் டோனி அரைசதம் கடந்தார்.

முன்னதாக நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் டோனி 51 ரன்களும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 55 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை இந்திய அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 198 ரன்களை குவித்துள்ளது. டோனி 71 ரங்களுடனும், ஜாதவ், 43 ரங்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers