டோனியை அவுஸ்திரேலியா வீரர்கள் புகழ்ந்து தள்ளியது ஏன் தெரியுமா? வெளியான காரணம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனியை அவுஸ்திரேலியா வீரர்கள் புகழ்ந்து தள்ளியதற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு பின் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் டோனி இடம் பெற்றிருப்பதால், அவரது ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதிலும் குறிப்பாக அவரது பயிற்சி மேற்கொள்வதை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அவரிடம் ஆட்டோகிராபும் வாங்கினர்.

இதற்கிடையில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம்பெய்ன் கிரிக்கெட் வீரர்களில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரர் என்றால் அது டோனி தான், குறைந்த ஓவர் போட்டிகளில் டோனி தான் எப்பவும் பெஸ்ட் என்று கூறினார்.

இதே போன்று அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், டோனி எந்த சூழ்நிலையில் இருந்தும் போட்டியை வெற்றி பெற வைத்து விடுவார்.

அவர் கேப்டன் பொறுப்பில் இருந்தால் மிக அமைதியாக இருப்பார். 100 கோடி இந்திய மக்களின் லட்சிய மனிதர் என கூறினார்.

இப்படி அவுஸ்திரேலியா வீரர்கள் பலரும் டோனியை புகழ்ந்து கூறினர். அவுஸ்திரேலிய வீரர்கள் அவ்வளவு சீக்கிரம் அந்த அளவிற்கு பெருமையாக கூறமாட்டார்கள்.

அப்படி இருக்கும் நிலையில், இவர்கள் ஏன் இப்படி புகழ்கிறார்கள் என்று யோசித்த போது, டோனி 2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருடன் ஒய்வு பெறப்போகிறார் என்று தகவல் உலா வருகிறது.

இதனால் அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் இது அவருக்கு கடைசி சுற்றுப்பயணமாக இருக்கலாம் என்பதன் காரணமாகவே அவர்கள் இப்படி புகழ்ந்து கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்