இந்தூரில் ஆந்திரா அணியுடன் நடந்த உள்ளூர் ஆட்டத்தில் மத்தியப்பிரதேச அணி 307 ரன் வித்தியாசத்தில் தோற்று பரிதாபமாக வெளியேறியது.
ரஞ்சி பி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆந்திரா அணியும், மத்தியப்பிரதேச அணியும் மோதின.
இதன் முதல் இன்னிங்சில் ஆந்திரா 132 ரன்னிலும், மத்தியப்பிரதேசம் 91 ரன்னிலும் ஆல் அவுட்டாகின.
பின்னர் 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய ஆந்திரா 301 ரன் குவித்தது.
இதையடுத்து 343 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மத்தியபிரதேச அணி.
அந்த அணி 13 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்தது.
மேற்கொண்டு ஒரு ரன் கூட சேர்க்காத ம.பி. 16.5 ஓவரில் 35 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
இதன்மூலம் மத்தியப்பிரதேச அணி 307 ரன் வித்தியாசத்தில் தோற்றதோடு, நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.