மிதவேகப் பந்துவீச்சால் ஸ்டம்பை தெறிக்கவிட்ட பிராவோ! உறைந்துபோன பேட்ஸ்மேன்

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக்பாஷ் லீக் தொடரில் வெய்ன் பிராவோ தனது மிதவேகப் பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரரை அபாரமாக ஆட்டமிழக்க செய்தார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஷ் டி20 தொடரின் இன்றைய லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ்-பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.

மெல்போர்ன் அணி நிர்ணயித்த 147 ஓட்டங்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெர்த் அணி, 17.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி வீரர் வெய்ன் பிரோவோ, 7 ஓட்டங்களில் விளையாடிக் கொண்டிருந்த பெர்த் அணி வீரர் ஆஸ்டனுக்கு மிதவேகப் பந்தினை வீசினார்.

இதனை சற்றும் எதிர் பார்க்காததால் ஆஸ்டன் போல்டு ஆகி வெளியேறினார். வெறும் 105 கிலோ மீற்றர் வேகத்திலேயே பிராவோ இந்த பந்தை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers