டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்களுக்கு நோட்டீஸ்: புதிய தடை விதிக்க பிசிசிஐ ஆலோசனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா ஆகியோருக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய அணியின் இளம் வீரர்களான கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா இருவரும் Koffee With Karan என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர்.

இதில் பாண்டியா பெண்களைப் பற்றி இழிவாகப் பேசியுள்ளார். இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், ‘நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் பேசவில்லை. உள்ளபடியே கூற வேண்டுமென்றால் நிகழ்ச்சியின் போக்கில் நான் லயித்துப் போய் அப்படி கூறிவிட்டேன். எனது பதில்கள் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுங்கள்’ என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய கருத்து கூறிய பாண்டியாவுக்கும், கே.எல்.ராகுலுக்கும் 24 மணிநேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இனி கிரிக்கெட் அல்லாத நிகழ்ச்சிகளில் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கவும் பி.சி.சி.ஐ பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers