இலங்கை டெஸ்ட் தொடர்: அவுஸ்திரேலிய அணியில் பிஞ்ச்-மார்ஷ் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் அதிரடி நீக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலிய அணியில் இருந்து ஆரோன் பிஞ்ச், மார்ஷ் சகோதரர்கள் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

தனது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா இழந்த நிலையில், அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது. இதில் ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் மற்றும் ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணிக்கு எதிரான தொடரில் இவர்களின் ஆட்டம் சிறப்பாக இல்லை. மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கிய ஹேண்ட்ஸ்காம்ப் சொற்ப ஓட்டங்களே சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இந்த வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியில் புகோவ்ஸ்கி, ஜோ பர்ன்ஸ், ரென்ஷா, பீட்டர் சிடில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 24ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்க உள்ளது.

Getty
Getty
அவுஸ்திரேலிய அணி விபரம்
 • டிம் பெய்ன் (கேப்டன்)
 • ஹசில்வுட்
 • ஜோ பர்ன்ஸ்
 • கம்மின்ஸ்
 • மார்கஸ் ஹாரிஸ்
 • டிராவிஸ் ஹெட்
 • உஸ்மான் கவாஜா
 • மார்னஸ் லாபஸ்சேக்னே
 • நாதன் லயன்
 • வில் புகோவ்ஸ்கி
 • ரென்ஷா
 • மிட்செல் ஸ்டார்க்
 • பீட்டர் சிடில்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers