ஒருபந்தில் 6 ரன்கள் தேவை! 6 Wide போட்டு அதிரவைத்த பந்துவீச்சாளர்.. வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

உள்ளூர் போட்டியில் ஒரு பந்தில் ஆறு ரன்கள் தேவை என்ற நிலையில் பந்துவீச்சாளர் 6 வைட்-களை (Wide) தொடர்ந்து வீசியதால் எதிரணி வெற்றி பெற்றது.

ஆந்திராவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தேசய் அணியும், ஜுனி டோம்பிவிலி அணியும் மோதின.

இதில் ஒரு கட்டத்தில் தேசய் அணி வெற்றி பெற 1 பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

இதையடுத்து ஜீனி அணியை சேர்ந்த இடது கை வேகப்பந்துவீச்சாளர் அந்த ஓவரை வீசினார்.

தொடர்ந்து ஆறு பந்துகளை வைடாக அவர் வீசினார். இதனால் தேசய் அணிக்கு 6 ஓட்டங்கள் கிடைத்தது. இதையடுத்து தேசய் அணி ஒரு பந்து மீதமிருக்க வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் ஜீனி அணியின் சக வீரர்கள் குறித்த பந்துவீச்சாளரை வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்கள்.

இது தொடர்பான வீடியோ டுவிட்டரில் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers