63 ஓட்டங்களில் சுருண்டது: மோசமாக தோல்வியடைந்த ஸ்டீவ் ஸ்மித்தின் அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச பிரிமீயர் டி20 லீக்கில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணி 63 ஓட்டங்களில் சுருண்டு மோசமாக தோல்வியடைந்தது.

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடரில் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் அணியும், ரங்க்பூர் ரைடர்ஸ் அணியும் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரங்க்பூ ரைடர்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய கொமிலா அணி வீரர்கள், மோர்தசாவின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த அந்த அணி, 16.2 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஷாகித் அப்ரிடி மட்டும் இரட்டை இலக்க ஓட்டங்கள்(25) எடுத்தார்.

மோர்தசா 11 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய ரங்க்பூர் ரைடர்ஸ் அணி, 12 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் தடையில் இருக்கும் ஸ்மித் லீக் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் தலைமையிலான அணி மோசமான தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers