அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, அடுத்ததாக ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் கொண்ட தொடரில் இலங்கை அணி பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு தினேஷ் சண்டிமல் தலைவராகவும், கருணரத்னே துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தொடரின் முதல் போட்டி 24ஆம் திகதி பிரிஸ்பேனிலும், 2வது போட்டி பிப்ரவரி 1ஆம் திகதி கான்பெர்ராவிலும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஜனவரி 17ஆம் திகதி 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நடைபெறும்.

இலங்கை அணி விபரம்
  • தினேஷ் சண்டிமல் (கேப்டன்)
  • கருணரத்னே
  • லஹிரு திரிமன்னே
  • குசால் மெண்டிஸ்
  • சதீரா சமரவிக்ரமா
  • தனஞ்செய டி சில்வா
  • ரோஷன் சில்வா
  • நிரோஷன் டிக்வெல்ல
  • குசால் ஜனித் பெரேரா
  • தில்ருவன் பெரேரா
  • லக்‌ஷன் சண்டகன்
  • சுரங்கா லக்மல்
  • நுவான் பிரதீப்
  • கசுன் ரஜிதா
  • தஷ்மந்தா சமீரா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers