அவர் மீது நெருக்கடியை திணிக்கக் கூடாது: அவுஸ்திரேலிய வீரருக்கு கோஹ்லியின் ஆதரவு

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியாவிற்கு எதிரான தொடரில் குறிப்பிடத் தகுந்த வகையில் பந்து வீசாத மிட்செல் ஸ்டார்க்கை விமர்சனம் செய்வது ஆச்சர்யம் அளிக்கிறது என விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சு பெரிதாக எடுபடவில்லை.

மொத்தம் 7 இன்னிங்சில் அவர் 13 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். மேலும் சிட்னி டெஸ்டில் அவரால் ஒரு ஓவரைக் கூட மெய்டன் செய்ய முடியவில்லை. இதனால் ஸ்டார்க் மீது அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்தனர்.

இந்நிலையில் ஸ்டார்க்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,

‘ஸ்டார்க் மிகவும் திறமை வாய்ந்த பந்துவீச்சாளர். அவர் சரியான மனநிலையை பெற்றுள்ளார். தற்போது வரை அவர் அவுஸ்திரேலியாவின் நம்பர்.1 பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

அவரை நோக்கி சிறிய அளவிலான விமர்சனம் வைக்கப்படுவது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. அவர் உங்களுடைய நம்பர்.1 பந்துவீச்சாளராக இருந்தால், அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும்.

அவர் மீது நெருக்கடியை திணிக்கக்கூடாது. ஏனென்றால், திறமையான மற்றும் வெற்றியை தேடிக் கொடுக்கக் கூடிய இதுபோன்ற பந்துவீச்சாளர்களை நீங்கள் இழக்க விரும்பமாட்டீர்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers