இலங்கையில் நடைபெற்ற முதல்தர போட்டியில், சுழற்பந்து வீச்சாளர் மலிந்தா புஷ்பகுமாரா 10 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற முதல்தர கிரிக்கெட்டில் கொழும்பு கிரிக்கெட் கிளப் மற்றும் சராசென்ஸ் அணிகள் மோதின.
இதில் கொழும்பு கிரிக்கெட் கிளப் அணி, சராசென்ஸ் அணியின் வெற்றிக்கு 349 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது. அதன்படி களமிறங்கிய சராசென்ஸ் அணி மலிந்தா புஷ்பகுமாராவின் மாயாஜால சுழலில் 113 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 235 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொழும்பு அபார வெற்றி பெற்றது. மலிந்தா 37 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி மிரட்டினார்.
கொழும்பு அணி வீசிய ஓவர்களில் பாதி ஓவர்களை மலிந்தா வீசினார். அதாவது கொழும்பு அணி மொத்தம் வீசிய 36.4 ஓவர்களில், மலிந்தா 18.4 ஓவர்களை வீசினார்.
31 வயதாகும் மலிந்தா புஷ்பகுமாரா 123 முதல்தர போட்டிகளில் 715 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.