எங்களுடைய மாற்றம் தொடங்கிவிட்டது.. என்னுடைய மிகப்பெரிய சாதனை! விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை, இப்போதுள்ள அணிக்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்திருக்கிறது என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக, அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 4 போட்டிகள் இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

இந்த சாதனை குறித்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘அவுஸ்திரேலிய மண்ணில் 72 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை. இந்திய அணிக்கு சர்வதேச அளவில் வித்தியாசமான தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது.

எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது. நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, 4 ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலிய மண்ணில் இப்படி ஒரு தொடரை வெல்வேன் என்று நம்ப முடியவில்லை. ஒரே வார்த்தை மட்டும் சொல்கிறேன்.

இந்த அணியை நான் வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாகக் கருதுகிறேன். என்னை மிகச் சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது.

எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது பெருமைப்பட வைத்துள்ளது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு வந்து சாதித்துவிட்டார்கள். உண்மையில் இந்த வெற்றி எங்களுக்கு ஒரு மைல்கல் தான். இந்த வெற்றியை மிகச்சிறப்பாக கொண்டாடப் போகிறோம்.

இனிமேல் சிறிது காலத்துக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி அலாரம் வைக்கத் தேவையில்லை. இங்குள்ள ரசிகர்கள் எங்களுக்கு அதிகமான ஆதரவு அளித்தார்கள். வெளிநாட்டில் விளையாடுகிறோம் என்ற உணர்வில்லாமல் இருந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers