ஆக்ரோஷ பந்துவீச்சு: ஸ்டெம்பை சிதறவிட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஆக்ரோஷமாக பந்து வீசிய வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

கேப்டவுனில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டு பிலிஸின் (103) நிதானமான ஆட்டத்தால் 431 ரன்களை குவித்தது.

254 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்க்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணியில் துவக்க ஆட்டக்காரர்களை விட மற்ற வீரர்களின் சொதப்பலால் 294ரன்களுக்கு சுருண்டது.

வெற்றிக்கு 41 ரன்கள் மட்டுமே தேவை பட்ட நிலையில், இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் வீசிய பந்து, எதிரணியின் வெர்னன் பிளேண்டரின் பேட்டின் முனையில் பட்டு லெக் ஸ்டம்பை பதம் பார்த்தது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers