கோஹ்லி அப்படி வந்து விளையாடியது என்னை நெகிழ வைத்துவிட்டது! அவுஸ்திரேலியா வீரர் உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி பிங்க் நிற க்ளோஸ் மற்றும் பேட்டின் கிரிப் பிங்க் நிறத்தில் இருந்ததைக் கண்டு நான் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டேன் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் கிளான் மெக்ராத் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, டி20 தொடருக்கு பின் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணியின் தலைவரான கோஹ்லி பிங்க் நிற க்ளோஸ் அணிந்து வந்து விளையாடினார்.

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் மெக்ராத் மார்பக புற்றுநோயால் கடந்த 2008-ஆம் ஆண்டு இறந்தார்.

இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு மெல்போர்னில் நடக்கும் டெஸ்ட் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்றும் ஜனவரி முதல் வாரத்தில் சிட்னியில் நடக்கும் டெஸ்ட் போட்டி பிங்க் டெஸ்ட் எனவும் அழைக்கப்படுவதால், கோஹ்லி அப்படி பிங்க் நிற க்ளோஸ் அணிந்து விளையாடினார்.

இந்நிலையில் இதைக் கண்ட அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மெக்ராத் கூறுகையில், போட்டி துவங்கும் முன் ஒரு நாள் இரவு விராட் என்னிடம் வந்து பேசினாள் உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று கூறினார்.

இதனையடுத்து அவர் பேட்டிங் செய்ய வரும்போது அவரது கையுறை, பேட், என அனைத்திலும் பிங்க் நிறம் அறிந்திருந்தார் இது என்னை நெகிழ வைத்தது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers