மின்னல் வேகத்தில் செயல்பட்ட அவுஸ்திரேலிய வீரர்! மிரட்டலான ரன்-அவுட் வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

பிக் பேஷ் லீக் தொடரில் ஹோபர்ட் அணி வீரர் டி’ஆர்க்கி ஷார்ட் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிரணி வீரரை ரன்-அவுட் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன.

முதலில் துடுப்பாட்டம் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஹூக்ஸ் அதிகபட்சமாக 61 ஓட்டங்கள் எடுத்தார்.

முன்னதாக, சிட்னி அணியின் ஹென்றிக்ஸ் 31 ஓட்டங்களில் இருந்தபோது, அவர் அடிக்க முயன்ற பந்து பின்னே சென்றது. அதனை விக்கெட் கீப்பர் வாட் தவறவிட்டதால், ஹென்றிக்ஸ் ரன் ஓட முயன்றார்.

உடனே பந்துவீச்சாளர் டி’ஆர்க்கி ஷார்ட்டிடம் விக்கெட் கீப்பர் வாட் எறிந்தார். பின்னர் மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஷார்ட் பந்தை ஸ்ட்ம்பை நோக்கி துல்லியமாக எறிந்ததில் ஹென்றிக்ஸ் அவுட் ஆனார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers