இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Report Print Kabilan in கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 371 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் ஆடிய இலங்கை 326 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனதால், 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குசால் பெரேரா 102 ஓட்டங்கள் எடுத்தார்.

முன்னதாக, நியூசிலாந்து அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருந்தபோது இலங்கை பந்துவீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை.

இதனால் இலங்கை அணி வீரர்களுக்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. அணித்தலைவர் மலிங்காவுக்கு 20 சதவிதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவிதமும் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்